புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கரோனா பரவாமல் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாகும். தமிழகத்தில் அடுத்த மாதம் கரோனா நிவாரணத் தொகையின் 2-வது தவணை வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகையை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
தடுப்பூசி போடுவதில் மக்களிடையே நிலவி வரும் தயக்கத்தை முற்றிலுமாக போக்குவதற்கு கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியின் தொடக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் யார் என்பது அடுத்த கூட்டத் தொடருக்குள் அறிவிக்கப்படும். தலைவரை தேர்வு செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago