ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு - 5 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யவுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் பாதிக்கப் படும் நபர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வரு கின்றனர். அதேபோல், ஆக்சிஜன் கிடைக்காமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் திணறி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோக கட் டமைப்பை ஏற்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோக பணியை கண்காணிக்க மாநில அளவிலான கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தின் மூலமாக ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லா மல் விநியோகம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆக்சிஜன் விநியோக மையத்தை ஏற்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் காவேரி பார்போனிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும்பட்சத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை தொலைபேசியான 04172-273188 மற்றும் 273166 ஆகிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து ஆக்சிஜன் சிலிண்டர் பெற்றுச் செல்லலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்