கரோனா தாக்கம் முடிந்தவுடன் திருமணிமுத்தாறு திட்டம் தொடங்கு வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
திருச்செங்கோடு நகராட்சி கூட்டரங்கில் கோடை கால குடிநீர் பிரச்சினைகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கட்டுப்பாடு களுடன் இருக்க வேண்டும். இதனிடையே கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு ஒன்றியம் மற்றும் மல்லசமுத்திரம் பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்த திருமணிமுத்தாறு திட்டம் முக்கியமானது. கரோனா தாக்கம் முடிந்தவுடன் திருமணிமுத்தாறு திட்டம் குறித்து தொடர்புடைய அமைச்சரிடம் பேசி திட்டத்தை தொடங்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், திருச்செங்கோடு நகராட்சி, ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள், மல்லசமுத்திரம், எலச்சிபாளையத் தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, அவற்றுக்கான தீர்வு குறித்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, குடிநீர் வடிகால் வாரிய நாமக்கல் மாவட்ட நிர்வாக பொறியாளர் நடராஜன், பராமரிப்பு நிர்வாக பொறியாளர் ராஜமாணிக்கம், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago