குறைந்த அளவு மருந்து வருவதால் - குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் 2-வது டோஸ் தடுப்பூசி பணி நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை, சின்னப்ப நாயக்கன்பாளையம் மற்றும் கொத்துகாரன்காடு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏராளமான மக்கள் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி போட வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி மருந்து வராததால் சில நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி கூறுகையில், கரோனா தடுப்பூசி மருந்து நாள் ஒன்றுக்கு 80, 90 என்ற அளவில் தான் வருகிறது. இதனால் முதல் டோஸ் தடுப்பூசி போடுபவர் களுக்கு முன்னுரிமை அளித்து போடப்படுகிறது.

இதனால் 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து வந்தால் குமாரபாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனை களுக்கும் ஒன்றாகத்தான் வரும். அதன்பின்னர் 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்