புதுக்கோட்டை உழவர் சந்தையில் 100 கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு, அதிகமானோர் வந்து சென்றதையடுத்து, அங்கிருந்து 45 கடைகள் கடந்த வாரம் புதிய பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
இதனிடையே, புதுக்கோட்டை யில் உள்ள தினசரி மார்க்கெட்டிலும் அரசு அனுமதித்துள்ள நேரத்தில் ஏராளமானோர் கூடுவதால் இந்தக் கடைகளையும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, இங்கு செயல்பட்டு வந்த 110 கடைகளும் நேற்று முதல் புதிய பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் தலைமையிலான பணியாளர்கள் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் நெரிசலின்றி காய்கறிகளை வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுத்து, சுகாதாரப் பணிகளையும் மேற்கொண்டனர்.
புதிய பேருந்து நிலைய காய்கறி மார்க்கெட்டை கோட்டாட்சியர் டெய்சிகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்த னர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago