புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு அறந்தாங்கி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
அறந்தாங்கி தாலுகா மருத்துவமனை 225 படுக்கை களுடன் இயங்கி வருகிறது. இங்கு அறந்தாங்கி மட்டுமின்றி மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவ மனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 லட்சம் மக்கள் பயன்பெறுவர். எனவே, இம்மருத்துவமனையை அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும்.
அதோடு, கூடுதல் கட்டிடங் கள் கட்டவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண் டும். தற்போது, கரோனா பேரி டர் காலமாக இருப்பதால் தாமதமின்றி இக்கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள் ளது என்றார்.
இதுகுறித்து மாவட்ட சுகா தார இணை இயக்குநர் ராமு கூறியது: அறந்தாங்கி அரசு மருத்துவ மனையானது மாவட்ட தலைமை மருத்துவமனையைப் போன்று செயல்பட்டு வந்தாலும், இது வரை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான அரசாணை வரவில்லை. இது குறித்து அர சுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago