பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு கேவிபி சார்பில் ரூ.1 கோடி வழங்கல் :

By செய்திப்பிரிவு

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.1 கோடி, மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் நேற்று வழங்கப்பட்டது.

கரூர் வைஸ்யா வங்கி(கேவிபி) தனது சமூக கூட்டு பொறுப்பு நிதியி லிருந்து(சிஎஸ்ஆர் பண்ட்ஸ்), தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு ரூ.1 கோடி வழங்க முடிவு செய்து, அதற்கான வரைவோலையை(டிடி) கரூ ரில் மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான(சிஇஓ) பி.ரமேஷ்பாபு நேற்று வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, வங்கியின் தலைவரும், முதன்மை இயக்க அலுவலருமான(சிஓஓ) ஜெ.நட ராஜன், வங்கி இயக்குநர்கள் எம்.கே.வெங்கடேசன், ஏ.கே.பிரபுராஜ், ஆர்.ராம்குமார், எம்எல் ஏக்கள் குளித்தலை இரா.மாணிக்கம், அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் உடனி ருந்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்