வேலூரில் வியாபாரிகள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் - 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் : மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகரில் 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் அவர் களின் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு முன் னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், பூ வியாபாரிகள், மீன் வியாபாரிகள், பலசரக்கு வியாபாரிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை, சில்லறை கடைகள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 73 ஆயிரத்து 754 பேரில் இதுவரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 223 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளது. கையிருப்பில் தற்போது 7,800 தடுப்பூசிகள் உள்ளன. இதில், மாநகராட்சிக்கு முன்னுரிமை அளித்து விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக கிராமப் புறங்களில் தடுப்பூசி போடப்படும்.

வேலூர் மீன் மார்க்கெட் பகுதியில் கூட்டம் நெரிசல் ஏற்படுவதால் மொத்த விற்பனை கடைகளை மீன் மார்க்கெட்டில் நடத்தவும் சில்லறை கடைகளை ஆடு தொட்டியாக இருந்து தற்போது தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்ட பகுதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அரசின் உத்தரவை மீறி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆடு, கோழி, மீன் கடைகளை திறப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாநகரில் வணிகர் சங்கம், காய்கறி, பூ வியாபாரிகள், மீன் வியாபாரிகள், பலசரக்கு வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அவர்களின் கடைகளில் வேலை செய்யும் 45 வயதுக்கு மேற்பட்டு பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களில் தடுப்பூசி விடுபட்ட நபர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளுக்கு அருகே உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், 18 வயது முதல் 45 வயதுள்ள பணியாளர்களின் விவரங்களை அளித்தால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் படும்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்