முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே வருவோரை - கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸார் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 2 வது அலையில் உயிரிழப்பு, தொற்று எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு கடைபிடிக் கப்பட்டு வருகின்றன. காய்கறி, மளிகை கடைகள் மட்டும் நேற்று முதல் காலை 10 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்தது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஹோட்டல்கள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வழக்கம் போல மருந்தகங்கள், மருத்துவமனைகள் இயங்கின. மாவட்ட எல்லைகளில் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும் தேவையின்றி வெளியே வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.டாக்டரின் பழைய பிரிஸ்கிரிப்ஷனை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் பிரிஸ்கிரிப்ஷன் கடந்தாண்டு கொடுக்கப்பட்டதாக உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இப்படி வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். கடந்த ஆண்டைப்போல போலீஸாருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்படாததே இப்போதைய நிலைக்கு காரணம். இதே நிலை தொடர்ந்தால் ஜூன் மாதமும் ஊடங்கை நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்