கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - 68 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15,324 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 13,356 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். 1,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் 525 படுக்கைகள் உள்ளன. இதில் 512 படுக்கைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 படுக்கைகள் காலியாக உள்ளன. இதேபோன்று ஆக்ஸிஜன் வசதியில்லாத படுக்கைகள் 100-ல்58 படுக்கைகளில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 42 படுக்கைகள் காலியாக உள்ளன. 7 இடங்களில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு 1,640 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளனர். 288 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இது மாவட்ட மக்கள் தொகையில் 16 சதவீதம் என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்