பெண்மையை போற்றும் விதவிதமான ஓவியங்கள் : ஊரடங்கை பயனுள்ளதாக்கிய கல்லூரி மாணவி

By என்.சன்னாசி

உலக குடும்ப தினத்தையொட்டி, காபி ஆர்ட் மூலம் பெண்மையின் சிறப்புகளை விளக்கும் விதவிதமான ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து வரும் மாணவியை பலரும் பாராட்டினர்.

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் கீர்த்திகா(21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை காய்கறி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், உலக குடும்ப தினைத்தையொட்டி குடும்பத்தின் ஆணிவேராகத் திகழும் பெண்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் காபித் தூளை பயன்படுத்தி பல்வேறு ஓவியங்களை கீர்த்திகா வரைந்து வருகிறார்.

குடும்பத்தில் முக்கிய நபர் தாய். அவரது அன்றாடப் பணிகள், பெண் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வளர்கிறார். அவர்கள் செய்யும் பணிகள் குறித்து ஓவியங்களை வரைந்து வருகிறார். 160 சதுர அடி பிளக்ஸ் பேனரில் 12 மணி நேரத்தில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

இது குறித்து கீர்த்திகா கூறும்போது, காபி ஆர்ட் குறித்து சிறிது தான் தெரியும். கரோனா முதல் ஊரடங்கில் வீட்டில் இருந்ததால் தொடர்ந்து வரையக் கற்றுக் கொண்டேன். உலகக் குடும்ப தினத்தையொட்டி ஒவ்வொருவரும் நினைவுகூர வேண்டியவர் தாய்தான். தந்தைக்கும் மேலாக அவரை நான் பார்ப்பதால் தாய் குறித்த 11 விதமான ஓவியங்களை வரைந்துள்ளேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்