கரோனா தொற்றிலிருந்து மக்களைபாதுகாக்கும் வகையில் திருச்செங்கோடு லாரி உரிமை யாளர்கள் சங்கத்திற்கு சொந்த மான பெட்ரோல் பங்கில் மூலிகை ஆவி பிடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றைக்கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அரசின் செயல்பாடு களுக்கு பல்வேறு தனியார் அமைப்புகளும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், லாரி உரிமையாளர்கள் சங்கத் துக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் மூலிகை ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
இதற்காக பெரிய குக்கரில் ஆடாதொடை இலை, கற்பூரவள்ளி, துளசி, வேம்பு, கிராம்பு, மிளகு, மஞ்சள், எலுமிச்சை, உப்பு, இஞ்சி, வெற்றிலை உள்ளிட்ட 12 வகையான மூலிகை பொருட்களை போட்டு கொதிக்க வைத்து இதில் உருவாகும் ஆவியை நான்கு குழாய்கள் வழியாக வாடிக்கை யாளர்கள் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்க செயலாளர் ரவி கூறுகையில், பெட்ரோல் பங்க் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி மூலிகை ஆவி பிடிக்கும் வசதியை உருவாக்கி உள்ளோம். ரூ.15 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி மூலம் நாள்தோறும் சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து ஆவி பிடிக்க முடியும். இதற்காக தினசரி ரூ.1,500 செலவாகிறது.
இதுபோல மேலும் 4 பங்க்கில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணி கரோனா காலம் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago