மது விற்ற 11 பேர் கைது :

கரோனா ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதைத் தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் , முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம், சேரகுளம், ஏரல், குளத்தூர், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 84 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியில் அய்யாபுரம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த அப்பகுதியைச் சேர்ந்த சுப்பையா (37) என்பவரை கைது செய்து, 179 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஆலங்குளத்தில் மது விற்பனை செய்த மோகன் (62) என்பவரை போலீஸார் கைது செய்து, 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்