கரோனா குறித்து ஆன்லைனில் இன்று நடத்தப்படும் விழிப்புணர்வு கருத்தரங்கில் பொதுமக்கள் பங்கேற்கலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட நிர்வாகம்,தன்னார்வ தொண்டு நிறுவனங்க ளுடன் இணைந்து கரோனாவை வெல்வோம் என்ற தலைப்பில் ஜூம் மீட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொது மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.
கரோனா நோயிலிருந்து தங்களை எப்படி காத்துக் கொள்வது என்பது தொடர்பாக பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி விளக்கம் அளிக்க உள்ளார். கரோனாவை கட்டுப்படுத்த பொது மக்களின் பங்கு குறித்தும் விவாதிக்க உள்ளார். கரோனா தொடர்பாகபொதுமக்களின் சந்தேகங்க ளுக்கும் பதிலளிக்க உள்ளார்.
இதில் கலந்து கொள்ள ஜூம் மீட்டிங் ஐடி 891 5601 2627 Pass Code: imankl ஆகும். இதில் அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago