விழுப்புரம் மாவட்டத்தில் 5.88 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
கரோனா நிவாரணம் முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 ரேஷன் கடைகளில் 5,88,169 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனாநிவாரணம் தலா ரூ. 2 ஆயிரம்முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.117.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வரும் ஜூன் 3-ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்று சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், வருவாய்கோட்டாட்சியர் ஹரிதாஸ், வட்டாட்சியர் வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் செஞ்சி, வல்லம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் கரோனா நிவாரணம் முதல் தவணை ரூ.2,000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் நேற்று வழங்கினார். இதில், திண்டிவனம் வட்டத்தில் ரூ.18,87,18, 000 மதிப்பீட்டில் 94, 359 குடும்ப அட்டைதாரர்களுக்கும், செஞ்சி வட்டத்தில் ரூ.17,40,56, 000 மதிப்பீட்டில் 87, 028 குடும்ப அட்டைதாரர்களுக்கும், மேல்மலையனூர் வட்டத்தில் ரூ.8, 12,68, 000 மதிப்பீட்டில் 40, 634 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்படுகிறது. மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் லட்சுமணன் எம்எல்ஏ, சரஸ்வதி அவென்யூ,விராட்டிக்குப்பம், அனிச்சம்பாளையம், கீழ்பெரும்பாக்கம், வளவனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago