தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் ஆண்டாங்கோவில்புதூ ரில் நேற்று ரேஷன் கார்டுதாரர்க ளுக்கு கரோனா நிவாரண உதவி முதல் தவணை வழங்கும் நிகழ்ச் சியை தொடங்கி வைத்த பின், மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது:
கரூர் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத் தில்(டிஎன்பிஎல்) ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட உள் ளன. ஜூன் 3-வது வாரத்தில் இதற் கான பணிகள் தொடங்கும். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியருடன் ஆய்வு செய்யப்படும். இங்கு 250 ஆக்சி ஜன் சிலிண்டர்கள் தயாரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வேறு எந்த தொழிற்சாலையிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான சாத்தி யக்கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்படும். மாதந்தோறும் மின் கணக்கீடு செய்வதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என் றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago