மீன்பிடி தடை காலத்தில் - படகுகளை சீரமைக்க வட்டியில்லா கடன் : தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மீன் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காலத்தில் தங் களது விசைப்படகுகளை மீனவர் கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, புதுக் கோட்டை மாவட்டத்தில் கோட் டைப்பட்டினம், ஜெகதாப்பட்டி னத்தில் உள்ள 2 விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் படகுகள் சீரமைப்பு பணி மும்முர மாக நடைபெற்று வருகிறது.

படகுகளை சீரமைப்பதற்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவா கிறது. எனவே, அரசு வட்டியில்லா கடனுதவி செய்ய வேண்டும் என மீன வர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவ சங்கத்தினர் கூறியது: கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கரோனா பரவல், இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு காரணங்களால் மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. தற்போது மீன்பிடி தடை காலத்தில் படகுகளில் பழுது நீக்கி சீரமைக்க குறைந்தது ரூ.1 லட்சம் செலவாகிறது. இத னால், பொருளாதார ரீதியாக மிகவும் சிரமமாக உள்ளது.

எனவே, படகுகளை சீரமைக்க தமிழக அரசு படகு உரிமை யாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்