திருநெல்வேலி மாவட்டத்தில் 658 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 212 பேர், அம்பாசமுத்திரம்- 70, சேரன் மகாதேவி- 20, களக்காடு- 22, மானூர்- 40, நாங்குநேரி- 47, பாளையங்கோட்டை- 61, பாப்பாகுடி- 16, ராதாபுரம்- 90 மற்றும் வள்ளியூர்- 80 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குமரியில் 9 பேர் மரணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது. 9 பேர் மரண மடைந்தனர். மருத்துவ மனை மற்றும் வீடுகளில் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கரோனா தடுப்பூசிக்கும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 896 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 424 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 183 பேர் குணமடைந்தனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago