ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் 9 பெண் காவலர்களுக்கு இரு சக்கர வாகனத் துடன் மடிக்கணினியை வேலூர் சரக டிஐஜி காமினி வழங்கினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவின் செயல்பாடுகளை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை எடுத் துள்ளது. இதற்காக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அதிக புகார்கள் வரப்பெறும் காவல் நிலையத்தில் பிரத்யேகமாக பெண் காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு புகார்கள் தொடர்பாக விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, நியமிக்கப்படும் பெண் காவலர்களுக்கு ஒரு மடிக்கணினி மற்றும் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு நகரம், திமிரி, கலவை, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், அரக்கோணம் நகரம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், அரக்கோணம் அனைத்து மகளிர் என 9 காவல் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனியாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு, இரு சக்கர வாகனம், மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேலூர் சரக டிஐஜி காமினி பெண் காவலர்களிடம் மடிக்கணினி மற்றும் இரு சக்கர வாகனத்தை ஒப்படைத்தார். அப்போது, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago