முகக்கவசம் அணியாத5,478 பேர் மீது வழக்கு: கரூர் எஸ்.பி தகவல் :

By செய்திப்பிரிவு

முகக்கவசம் அணியாதவர்கள் மீது 5,478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சசாங்சாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதை அடுத்து, கரோனா பரவலை தடுக்கும் விதமாக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர வாகனசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் நேற்று முன்தினம் விதிகளை மீறி திறந்திருந்த 8 கடைகளுக்கு நகராட்சி மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப். 24-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 5,478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூ.10,95,600, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 277 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.1,38,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு காலங்களில் விதிகளை மீறி சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்