முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான்பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
கரோனா தொற்று பரவல்காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால், முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் ரம்ஜான்தொழுகையை நிறைவேற்றினர். தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, மேக்கரை, புளியங்குடி, வடகரை, பொட்டல்புதூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள்தங்கள் வீடுகளில் குடும்பத்துடன் தொழுகை நடத்தினர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினர். வீடுகளின் மொட்டை மாடிகளில் சிலர் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி, காயல்பட்டினம், பேட்மா நகரம், உடன்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தொழுகை நடத்தினர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago