தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து, அரசுஅலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன், சென்னை பெருநகர வளர்ச்சி கழக உறுப்பினர் செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எஸ்.ஜே.சிரு ஆகியோர் தலைமை வகித்தனர். எம்பி தனுஷ் எம்.குமார் முன்னிலை வகித்தார்.
`தென்காசி மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட கரோனா வைரஸ் பாதிப்பின் அளவு குறைவாக உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு உள்ளன. தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் முகாம்கள் அமைத்துத் தரப்படும். அந்த முகாமில் 20 அல்லது 40 நபர்கள் ஒன்றாக சேர்ந்து தடுப்பூசிகள் போடுவதன் மூலம் தடுப்பூசிகள் வீணாகாமல் தடுக்கப்படும். ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் போதுமான அளவு தயார் நிலையில் உள்ளன’ என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago