ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாளை (மே-16) முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.35 லட்சம் லிட்டர் பால்கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் புதிய விலை குறைப்பு அறிவிப்பின்படி வேலூர் ஆவினில் சமன்படுத்தப் பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை ரூ.43-ல் இருந்து ரூ.40 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.47-ல் இருந்து ரூ.44 ஆகவும், நிறை கொழுப்பு பால் லிட்டர் ரூ.51-ல் இருந்து ரூ.48 ஆகவும் குறைக்கப்படு கிறது. இந்த புதிய விலை குறைப்பின்படி பொதுமக்கள் ஆவின் பாலை வாங்கி தமிழக அரசுக்கும் ஆவின் நிறுவனத்துக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேலூர் ஆவின் பொது மேலாளர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago