வேலூர் மாவட்டத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக நீர்வளத்துறை அமைச் சராக பொறுப்பேற்றுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூருக்கு நேற்று வருகை தந்தார். வேலூர் அண்ணா சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலரும் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், வேலூர் சரக டிஐஜி காமினி, உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், வேலூர் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா நிலவரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேசி னேன். நேற்று கூட ஆக்சிஜன் தேவை என கேட்டார்கள். அதை அனுப்பிவைத்தோம். இரவுக்குள் காலியாகிவிட்டதாக கூறி மீண்டும் கேட் டார்கள். இரண்டாவது முறையாகவும் ஆக்சிஜன் அனுப்பியுள்ளோம். இது போதிய அளவுக்கு உள்ளதா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
காரணம், வேலூரை பொறுத்த வரை 100 நோயாளிக்கு ஆக்சிஜன் அனுப்பினால் அது வேலூருக்கு வந்து சேருவதற்குள் 150 நோயாளிகள் அனுமதிக்கப் படுகிறார்கள். ஆகவே, ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது. இந்த பிரச்சினை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும். மத்திய அரசிடமும் ஆக்சிஜன் கேட்டுள் ளோம்’’ என்றார். அப்போது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago