ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், தி.மலை மாவட்டங்களில் - ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு தொழுகை :

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் இஸ் லாமியர்கள் புனித ரம்ஜானை பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா இரண் டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையை யொட்டி பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லா மியர்கள் புத்தாடை அணிந்து கொண்டாடியதுடன் வீடுகளில் சமூக இடைவெளியுடன் தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

திருப்பத்தூர்

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கோலா கலமாக கொண்டாடுவது வழக்கம். பண்டிகை அன்று புத்தாடை உடுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அருகே யுள்ள மசூதி மற்றும் ஈத்கா மைதானங்களுக்கு சென்று இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகையில் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில் இருந்தபடியே ரம்ஜான் பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என இஸ்லாமிய மதகுருக்கள் தெரி வித்தனர்.

இதனை பின்பற்றிய இஸ்லாமியர்கள் திருப்பத்தூர், வாணியம் பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் இருந்தபடியே சிறப்பு தொழுகை யில் ஈடுபட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல் போன் வாயிலாக ரம்ஜான் வாழ்த் துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளும் வீட்டில் இருந்தபடி கூட்டு தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

திருவண்ணாமலை

கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் மூடப் பட்டுள்ளன. வழக்கமான நிகழ்வு கள் தடையின்றி நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக மசூதிகளுக்கு இஸ்லாமியர்கள் நேற்று செல்ல வில்லை. அதற்கு மாற்றாக, அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் தொழுகையில் ஈடுபட்டனர். உறவினர்கள் மற்றும் நண்பர் களுக்கு செல்போன் மூலமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் அவர்கள், மசூதிகளின் நிர்வாகம் மூலமாக தானம் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்