தி.மலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் - 4 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உதவியாளர்கள் என 4 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்றும் அவர்களது உதவியாளர்கள் என 4 ஆயிரம் பேருக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தினசரி மதிய உணவு வழங்கப் பட உள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2,500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது. இதை யொட்டி, முதற் கட்டமாக நேற்று முன்தினம் ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன், அண்ணா மலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் ஜான்சி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்