கரூர் பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சைக் கான சிறப்பு சித்த மருத்துவப் பிரிவு மையத்தை தமிழக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, நேற்று பார்வையிட்டார்.
பின்னர், அவர் கூறியது: கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறைந்தளவு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு, கரூர் பழைய அரசு மருத்துவமனை, குளித்தலை, வேலாயுதம்பாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மைலம்பட்டி, வெள்ளியணை ஆகிய 8 இடங்களில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தலா 40 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்து, மே 25-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
அப்போது, கரூர் எம்.பி செ.ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச உணவு
கரூர் தொகுதியைச் சேர்ந்த கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் 'தளபதி கிச்சன்' என்ற பெயரில் 3 வேளையும் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் பணியை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, கரூர் எம்.பி செ.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் குளித்தலை மாணிக்கம், அரவக்குறிச்சி ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago