கு.பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் காலி சிலிண்டர் தேவை :

By செய்திப்பிரிவு

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு 20 காலி சிலிண்டர்கள் தேவை என மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா நடைபெற்றது. தலைமை மருத்துவர் பாரதி தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆட்சியர் உத்தரவின்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் உடனுக்குடன் கிடைத்து வருகிறது.

தற்போதுள்ள சிலிண்டர்கள் மருத்துவமனை உபயோகத்துக்கு பயன்படுத்தும் நிலையில், வெளியில் சென்று வாங்கி வர 20 காலி சிலிண்டர்கள் தேவை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் இருவர் உள்ளிட்ட 29 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை முதல் டோஸ் 666 பேரும், இரண்டாவது டோஸ் 820 பேரும் செலுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்