மருத்துவர்களின் அணுகுமுறைகள் குறித்து - கரோனா பரிசோதனை முகாமில் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மகளிர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்பிரிவு சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார். கரோனாசிகிச்சை பெறும் நபர்களிடம் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் மருத்துவர்களின் அணுகுமுறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

தொடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட தனிமைப் படுத்தப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி பணியாளர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று வழங்கிட உத்தரவிட்டார்.

தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள கரோனா பரிசோதனை முகாமினை ஆய்வு செய்தார். பரிசோதனையில் ஈடுபடும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தகுந்து பாதுகாப்புடன் தங்களது பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்