குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கூடுதலாக 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குண்டியமல்லூர்,சிறுபாலையூர், தானூர்,காயல்பட்டு, பூவாணி குப்பம் உட்பட 11 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வந்தனர்.
இந்நிலையில் தமிழக வேளாண்- உழவர்நலத் துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பரிந்துரையின் பேரில் நடப்பு பருவத்தில் நவரை நெல் சாகுபடிக்கு குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள சம்பாரெட்டிபாளையம், ஆணையம்பேட்டை, ஆயித் துறை, கருவேப்பம்பாடி, கம்பளி மேடு, மேட்டுப்பாளையம், சிறுபாலையூர், ஆண்டார் முள்ளிப்பள்ளம், கள்ளையாங் குப்பம், ஆயந்தூர், தீர்த்தனகிரி ஆகிய 11 இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் அவைகள் செயல்பட தொடங்கின.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago