கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத் தின்(டிஎன்பிஎல்) ஆலை மற்றும் குடியிருப்பு தேவைகளுக்காக கட்டிப்பாளையம் காவிரி ஆற்றில் குடிநீர் கிணறுகள் அமைக் கப்பட்டுள்ளன. இங்கு நீரேற்று நிலையமும் உள்ளது.
இதே பகுதியில், அருகிலுள்ள என்.புதூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை ஆகிய ஊராட் சிகளுக்கான குடிநீர் கிணறு களும் உள்ளன.
ஆண்டுதோறும் கோடைகாலத் தில் செய்வது போல, நிகழாண்டும் டிஎன்பிஎல் ஆலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கான குடிநீர் கிணறுகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், காவிரி ஆற்றில் பள்ளம் தோண்டி, பிற பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் தடுப்புகளை ஏற்படுத்தும் பணிகளை டிஎன்பிஎல் நிர்வாகத்தினர் நேற்று மேற்கொண்டனர். அப்போது, அங்கு சென்ற திருக்காடுதுறை ஊராட்சித் தலைவர் அசோக், பள்ளம் தோண்டும் பணியால் தங்கள் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதை யடுத்து, டிஎன்பிஎல் நிர்வாகத் தினர் பணிகளை நிறுத்திவிட்டு, பொக்லைனுடன் வெளி யேறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago