கோடை விடுமுறைக்குப் பின் - தமிழக அரசு சார்பிலான வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படும் : சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

By செய்திப்பிரிவு

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தமிழக அரசு சார்பிலான வழக்குகளின் மீதான விசாரணை கோடை விடுமுறைக்குப் பின் துரிதப்படுத்தி தீர்வு காணப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற எஸ்.ரகுபதி, சட்டத்துறை அமைச்சரான பிறகு சென்னையில் இருந்து நேற்றிரவு புதுக்கோட்டை வந்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய தீர்வு காண்பார்.

தமிழக அரசு சார்பில் நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப் பட்டுள்ள நீர் பங்கீடு, நீட் தேர்வு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு இவ்வழக்குகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி தீர்வு காணப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்