கரோனா பரவல் அதிகரித்து வருவதால் - சட்ட ஆலோசனைகளை பெற மின்னஞ்சல், வாட்ஸ்-அப் செயலி :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சட்ட ஆலோசனைகள் பெற வாட்ஸ்-அப், மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் செல்வி. எஸ். அசீன்பானு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக திருப்பத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நேரடியாக சட்ட ஆலோ சனை வழங்கும் பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஆலோ சனைகள் மற்றும் சட்ட உதவி, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்புக் கான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் உதவி எண் மூலமும், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்-அப் செயலி மூலம் தொடர்பு கொண்டால் அதற்கான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

ஆலோசனை கேட்க விரும்பு பவர்கள் அலுவல் நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணி நாட்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம். அதற்கான ஹெல்ப் லைன் எண்: 04179-222077, வாட்ஸ் -அப் எண் : 93854-72439 மற்றும் tirupatturlegal@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும், https://nalsa.gov.in/lsams என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்