கரோனா தொற்றை கட்டுப்படுத் தும் வகையில் நேற்று முன் தினம் முதல் வரும் 24-ம் தேதி வரைமுழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றும் இருசக்கரமற்றும் நான்கு சக்கர வாகனங்களும் வழக்கம் போல் இயங்கின.இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "நேற்று முதல்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பதிவு எண்கள் சேகரிக்கப்படுகின்றன. அவசியமில்லாமல் ஒரு முறைக்கு மேல் பயணிக்கும் வாகனங்களுக்கு அபராதம்விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "தங்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்ற விவரம் எஸ்எம்எஸ்மூலம் வாகன உரிமையாளர்க ளுக்கு அனுப்பப்படும். அபராத தொகையை அவர்கள் நீதிமன்றத்தில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்" என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago