தென்காசி மாவட்டம் வடகரை அருகே விளைநிலங்களுக்குள் யானைக்கூட்டம் புகுந்து, தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்தி வருவதால்விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களாக வடகரை அருகேயுள்ள பருத்திக்காடு, சென்னாபொத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில்விளை நிலங்களுக்குள் யானைக்கூட்டம் புகுந்து பயிர்களை நாசம்செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து, வடகரையைச் சேர்ந்த விவசாய பிரதிநிதி ஜாகீர்உசேன் கூறும்போது, யானைக்கூட்டங்களின் அட்டகாசத்தால் 25-க்கும் மேற்பட்டதென்னைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மாமரங்களின் கிளைகளை உடைத்து சேதப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான மாங்காய்கள் உதிர்ந்துள்ளன. வாழைகளையும் சேதப்படுத்தியிருப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் அந்தப்பகுதிக்கு பகல் நேரங்களில் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே, யானைகளை அப்பகுதியிலிருந்து காட்டுக்குள் விரட்டவும், பயிர்சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago