திருவண்ணாமலையில் கூடுதலாக தலா 100 படுக்கைகளுடன் அமைக் கப்பட்டு வரும் 2 பராமரிப்பு மையங்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, ஆரணி, செய்யாறு, தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,100 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 600 படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை. மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்லூரிகள் உட்பட 22 இடங்களில் 2,200 படுக்கை களுடன் கரோனா பராமரிப்பு மையம் செயல்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தீவிரமடைந் துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி 600-க்கும் மேற் பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, படுக்கை வசதிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தி.மலை அரசு கலைக் கல்லூரி மற்றும் தி.மலை ஈசான்ய லிங்கம் அருகே உள்ள யாத்ரி நிவாஸில் தலா 100 படுக்கை வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பராமரிப்பு மையங்களில் நோயாளிகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து அவர், வேங்கிக்கால் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாமை பார்வை யிட்டார். இதற்கிடையில், முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கிரிவலப்பாதை அபய மண்டபம் அருகே இரு சக்கர வாகனத் தில் சுற்றிய 2 இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago