வேலங்காடு : ஏரி திருவிழாவுக்கு பக்தர்கள் வர தடை :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு வட்டத்துக்கு உட்பட்ட வேலங்காடு புஷ்பரதம் ஏரித்திருவிழா பிரசித்திப் பெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை நாளில் திருவிழா நடைபெறும்.

இதில், அணைக்கட்டு மட்டுமில்லாது மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் குடும்பத் துடன் பங்கேற்று ஆடு, கோழி களை பலியிட்டு விருந்து படைப் பார்கள்.

இந்நிலையில், சித்திரை மாதம் கடைசி புதன்கிழமையான இன்று நடைபெற இருந்த புஷ்பரத ஏரித்திருவிழா கரோனா ஊரடங்கு காரணமாக நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளதுடன், ஏரிக் குள் நுழையும் அனைத்து பாதைகளிலும் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் தடையை மீறி யாரும் திருவிழாவுக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்