வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களிடம் தகராறு செய்தால், ஜாமீனில் வெளியே வர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா குறித்த அச்சம் சிறிதும் இல்லாமல் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு சில கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சில வணிக நிறுவனங்களும் கரோனா விதிமுறைகளை மீறி விற்பனையில் மும்முரமாக உள்ளன. இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, அந்தந்த பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள், நகர்நல அலுவலர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்து வருவாய்த் துறை அலுவலர்கள் என அனைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமப்பகுதி களிலும், நகர்புறங்களிலும் அனைத்து வார்டுகளிலும் கரோனா விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிப்பது கடுமையாக்கப் பட்டுள்ளது.
கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்களி டம் எந்த ஒரு நபராக இருந்தாலும் தகராறு செய்தலோ, அரசு அதிகாரி களை பணி செய்யவிடாமல் தடுத் தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago