முழு ஊரடங்கையொட்டி - ஈரோடு மாவட்டத்தில் 42 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு : நாமக்கல் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின

By செய்திப்பிரிவு

ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி நண் பகலுக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டதுடன் பேருந்து போக்கு வரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட தால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகள் மற்றும் கூடுதலாக 42 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 2 ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பிக்கள் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, சென்னி மலை ரோடு, பெருந்துறை ரோடு,அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா,வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பணியின்போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய சிலரை பிடித்த காவல் துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். சிலர் மீது வழக்குப்பதிவு செய்து இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதேசமயம் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவர்களை போலீஸார் அனுமதித்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரை கடைகள் திறந்திருந்தன. பின்னர்,அடைக்கப்பட்டன. இதனால்,நாமக்கல் மற்றும் மாவட்டத் திற்கு உட்பட்ட பிற பகுதிகளில்முக்கிய சாலைகள் அனைத்தும்வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள் ளதால் பேருந்து நிலையங்களும் வெறிச்சோடின. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்