விழுப்புரம் காவல் துறையில் மஞ்சள் படை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சென்னை போன்ற பெருநகரங்களில் காவல் துறையில் இயங்கி வரும் படைப் பிரிவுகளில் ஒன்றான மஞ்சள் படைப்பிரிவு (Yellow Brigade) என்ற பிரிவை விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று டிஐஜி பாண்டியன் தொடக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று இப்படைப் பிரிவினருக்கு 12 பைக்குகளை வழங்கினார். இப்படைப் பிரிவினர் சட்டம் ஒழுங்கு தொடர்பான புகார்கள் வரும்போது உடனே சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் அமைதியை கொண்டுவர முயற்சியை மேற்கொள்வார்கள்.

இந்த பைக்குகளில் சைரன், பிரகாசமான விளக்குகள், ஒலிபெருக்கி, வாக்கி டாக்கியில் இணைக்கப்பட்ட காலர் மைக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

விழுப்புரம் நகருக்கு 5 பைக்குகள், திண்டிவனம், ஆரோவில், செஞ்சிக்கு தலா 2 , கோட்டக்குப்பம் காவல்நிலையத்திற்கு 1 என 12 பைக்குகள் போலீஸாருக்கு அளிக்கப்பட்டுள்ளன. எஸ்பி ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி (பொறுப்பு) பாலமுருகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்