செஞ்சி அரசு மருத்துவமனையில் சிறுபான்மையினர் நல அமைச்சர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

செஞ்சி அரசு மருத்துவமனையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

செஞ்சி அருகே  ரங்கபூபதி கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செஞ்சி அரசு மருத்துவமனை, சத்தியமங்கலம், அவலூர்பேட்டை ,மேல்மலையனூர், வளத்தி, அனந்தபுரம் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் மகப்பேறு சிகிச்சை குறித்தும், கரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் பணியாற்றிட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேநீர் கடையில் அமைச்சர்

அமைச்சராக பதவியேற்று கொண்ட பின் நேற்று முன்தினம் இரவு செஞ்சிக்கு வந்தார். அமைச்சர் மஸ்தான் வந்தார். நேற்று காலை செஞ்சி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனது சகோதரரின் தேநீர் கடையில் வாடிக்கையாளர்களுக்கு சிறிது நேரம் தேநீர் போட்டுக்கொடுத்துவிட்டு, பின் ஆய்வுப் பணிகளுக்கு புறப்பட்டு சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்