கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, புதுக்கோட்டையில் உள்ள உழவர் சந்தையில் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டது. மேலும், ஒருநாள் விட்டு ஒரு நாள் விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கவும் சந்தையை நிர்வகித்து வரும் வேளாண் வணிக துறையினர் ஏற்பாடு செய்தனர். இவ்வாறு செய்வதால் தங்களது காய், கனிகள் அழுகி வீணாவதாகவும், எனவே தினந்தோறும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண் டும் எனவும் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ வை.முத்துராஜாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, உழவர் சந் தையை வை.முத்துராஜா நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உழவர் சந்தையில் தொழில் செய்துவருவோர் உழவர் சந்தை மட்டுமின்றி புதிய பேருந்து நிலையம், பழைய நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களிலும் தினந்தோறும் அரசு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் காய், கனிகளை விற்பனை செய்யலாம். இதன், மூலம் விவ சாயிகளின் காய்கறி வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படாது. மேலும், கூட்ட நெரிசலையும் தவிர்க்க முடியும்.
நகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை இன்னும் ஒரு வாரத்துக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago