வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் செயல் படும் கரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தொற்று ஏற்பட்டவர்கள் நேரடியாகச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர் களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். கரோனா தொற்று ஏற்பட்டதும், அவர்களை வகைப்படுத்தி மருத்துவமனைகள் அல்லது கோவிட் நல மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, விஐடி பல்கலைக் கழகத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. கடந்த 15 நாட்களில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 350 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.
தொடர்ந்து, குடியாத்தம் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மூன்றாவது மையமாக வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி முதல் இந்த மையம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் நேரடியாக சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா தொற்று ஏற்பட்டவர், ஆக்சிஜன் செறிவு இயல்பாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சித்த மருத்துவ சிகிச்சை பெற விரும்பினால் கரோனா பாசிட்டிவ் என்ற குறுந்தகவலை அல்லது தனியார் மருத்துவமனையின் ஆய்வுக்கூட அறிக்கையை நேரடி யாக கொண்டு சென்று சிகிச்சை பெறலாம்.
இந்த மையத்தில் பக்க விளைவுகள் இல்லாத கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு, தாளிசாதி வடகம், பிரமானந்த பைரவ மாத்திரை ஆகிய மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப் படும். மேலும், யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியான பயிற்சி, நீராவி பிடித்தல் உள்ளிட்ட இயற்கை யான முறைகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா உறுதி செய்யப்பட்ட வர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். கடந்த ஆண்டு கரோனா முதல் அலையில் 3 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றனர்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago