கரோனா நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இருந்தால் - கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா நிவாரணத் தொகை வழங்குவதில் முறைகேடு இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் புகார் அளிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பெருந்தொற்று காரண மாக பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதை குறைக்கும் வகையிலும் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் வகையில் 2021-ம் ஆண்டு மே மாதம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகளில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், திருப்பத் தூர் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இம்மாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைக்கு நிவாரணத்தொகை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் வருவதை தவிர்க்க தினசரி 200 அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்க அட்டவணை தயார் செய்யப் பட்டுள்ளது.

15-ம் தேதி முதல்

அதன்படி, கரோனா நிவாரணத் தொகை வரும் 15-ம் தேதி முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதால் யாரும் பதற்றமடைய வேண்டாம்.

ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரம், தேதி ஒதுக்கீடு செய்து அதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின்படி அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைக்கு சென்று அங்கு வரிசையில் நின்று சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கரோனா நிவாரணத் தொகையை பெற்றுச்செல்ல வேண்டும்.

கரோனா நிவாரண தொகையை பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் களுக்கு பொது மக்கள் புகார் அளிக்கலாம். மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. 04179-222111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் நிவாரண தொகை முறைகேடு இருந்தால் புகார் அளிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்