ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் - முழு ஊரடங்கு அறிவிப்பால் சாலைகள் வெறிச்சோடின : பகல் 12 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்டன

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மாலை மாவட்டத்தில் கரோனா முழு ஊரடங்கு அறிவிப்பால் பகல் 12 மணிக்கு கடைகள் முழுமையாக மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

கரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு பிறப்பித்துள்ள 2 வார ஊரடங்கு நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், தேநீர் கடைகள் போன்றவை பகல் 12 மணி வரை செயல்பட்டது. மேலும், உணவகங்களில் பார்சல் மூலம் விற்பனை நடைபெற்றது.

டாஸ்மாக் மதுபானக்கடைகள், பாத்திர கடைகள், துணி கடைகள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் மூடப் பட்டிருந்தன. சாலையோர கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட் டது. விளையாட்டு மைதானங் கள், நீச்சல் குளங்கள், உடற் பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருந் தன. மருந்தகங்கள், மருத்துவ மனைகள், பால் விற்பனை கடை கள் தடை இல்லாமல் செயல் பட்டன.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் ஆரணி, போளூர், தி.மலை, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செங்கம் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. அதேபோல் கடைகள் மூடப்பட்டதால், மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி அமைதியாக காணப்பட்டது.

தேவையின்றி வெளியே சுற்றிய நபர்களை எச்சரித்து காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்