விழுப்புரம் அருகே உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு 63 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி கொண்டு மினிவேன் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த மினி வேனை செல்லப்பன் என்பவர் ஓட்டி சென்றார். விழுப்புரம் அருகே அரசூரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் செல்லப்பன் சிறு காயத்துடன் தப்பினார்.
வேனில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் சிதறி விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸார் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து சிலிண்டர்களை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago