விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - 2 நாட்களில் ரூ.30 கோடிக்கு மது விற்பனை :

By செய்திப்பிரிவு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.30 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

கரோனாவின் தாக்கம் மேலும்அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க விழுப்புரம் நகரில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், டாஸ்மாக் கடைகளிலும் பலமடங்கு விற்பனை அதிகரித்தன.

புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு மதுப்பிரியர்கள் படையெடுத்துள்ளனர். இதனால், வழக்கத்தைவிட கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் 104 கடைகளும், விழுப்புரத்தில் 124 கடைகள் என மொத்தம் 228 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரு மாவட்டங்களில் வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.3 கோடியும், பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை மது விற்பனை நடக்கும்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சனிக்கிழமையான நேற்று முன்தினம் ரூ.15,53,33,284-க்கு மது விற்பனை நடந்தது. அதேபோல் நேற்றும் ரூ.15 கோடிக்கு மது விற்பனை நடந்தது. மொத்தத்தில் கடந்த 2 நாட்களில் இரு மாவட்டங்களில் ரூ. 30 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்