தேர்தல் பணிக்காக வெளியூர் சென்ற - பட்டாலியன் போலீஸாரை திரும்ப அழைப்பதில் தாமதம்? : கரோனா பரவும் நேரத்தில் குடும்பத்தை கவனிக்க முடியாமல் வேதனை

By என்.சன்னாசி

மதுரை உட்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் (பட்டாலியன்) சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வெளி மாவட் டங்களுக்கு மாற்றுப்பணிக்காக அனுப்பப்பட்டனர். இவர்கள் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதுரை 6-வது பட்டாலியனில் இருந்து சுமார் 900-க்கும் மேற்பட்ட போலீஸார் விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் பணி முடிந்தும், வெளியூர் சென்ற பட்டாலியன் போலீஸார் இதுவரை தலைமையிடத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனக் கூறப் படுகிறது.

கரோனா பரவும் நேரத்தில் குடும் பத்தினரை கவனிக்க முடியாதது, புதிதாக திருமணம் செய்தவர்கள் மனைவியைப் பிரிந்திருப்பது, கரோனா தடுப்பூசி செலுத்த வெகுதொலைவில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு செல்ல வேண்டியிருப்பது ஆகிய காரணங்களால் இவர்கள் பெரிதும் அச்சத்தில் இருப்பதாகவும், வாக்கு எண்ணும் பணி முடிந்ததும் பழைய இடத்துக்கு திருப்பி அழைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து மதுரை 6-வது பட்டாலியன் கமாண்டன்ட் இளங் கோவன் கூறியதாவது:

மதுரை 6-வது பட்டாலியனில் 985 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு இரண் டாவது தடுப்பூசி போட் டுள்ளோம். வெளியூரில் இருந் தாலும், வரவழைத்து தடுப்பூசி போடுகிறோம். இன்னும் 50 பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

சிவகங்கை, விருதுநகரில் தேர்தல் இன்றி பிற நாட்களிலும் இரு கம்பெனி போலீஸார் எப் போதும் தொடர் பணியில் இருப் பது வழக்கம்.

விருதுநகரில் பணியில் இருந்த எஸ்.ஐ. லட்சுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவருக்கு விடுப்பு அளித்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, அவரது நுரையீரலில் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது.

தொற்று உள்ளிட்ட பிரச்சினை யில் இருந்து பட்டாலியன் போலீஸாரைப் பாதுகாக்கப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம். தேர்தல் பணிக்கு வெளியூர் சென்றவர்கள் பெரும்பாலும் தலைமை இடத்துக்குத் திரும்பி விட்டனர். தஞ்சாவூர் பகுதியில் உள்ளவர்களும் ஓரிரு நாளில் மதுரைக்கு வந்து விடுவர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்