முழு ஊரடங்கு அறிவிப்பால் - பொருட்கள் வாங்க 2-ம் நாளாக குவிந்த மக்கள் :

இன்று முதல் இரண்டு வாரங் களுக்கு முழு ஊரடங்கு அறிவிப் பால் மதுரை, ராமநாதபுரம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க இரண்டாம் நாளாக நேற்று மக்கள் குவிந்தனர்.

கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க இன்று (மே 10) முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கின் முன் னெச்சரிக்கையாக நேற்றும், நேற்று முன்தினமும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. அனைத்துக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டது.

இதனால் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.

நகர் பகுதிகளில் போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் ராமநாத புரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது பார்வையிட்டு போலீஸாரின் பாதுகாப்பை ஆய்வு செய்தனர். இதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் நீண்ட வரிசையில் நின்று மது பானங்களை வாங்கிச் சென் றனர். கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அந்தந்தக் கடைகளில் ஒலிபெருக்கிகள் மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

மதுரை, திண்டுக்கல் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இதேபோல் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மதுரையில் கீழவாசல், சிம்மக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE