 நாராயணி பீடம் சார்பில் - 150 குடும்பங்களுக்கு நிவாரணம் :  சக்தி அம்மா வழங்கினார்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மே 10-ம் தேதி (இன்று) முதல் மே 24-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப் பட்டுள்ளதால் வசதியற்ற மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

இந்நிலையில், வேலூர் அடுத்த அரியூர்,  புரம், திருமலைக்கோடி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு  புரம் மற்றும்  நாராயணி பீடம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருட் களை  சக்தி அம்மா வழங்கினார். அப்போது,  புரம் பொற் கோயில் இயக்குநரும் அறங்காவலருமான சுரேஷ் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்